Word |
English & Tamil Meaning |
---|---|
குச்சு 2 | kuccu, n. prob. குற்றுள். 1. Hut, shed made of palm leaves; சிறுகுடில். என்னிலங்குச்சல (தனிப்பா. i, 384, 34). 2. Small room; |
குச்சு 3 | kuccu, n. <>guccha. [T. kutccu, K. M. kuccu.] 1. Tassel, bunch, collection, cluster, tuft; குஞ்சம். கவரி மேனிலாப்படக் குச்சொடுந் தூக்கினர் (உபதேசகா. சிவபுண்ணிய. 63). 2. See குச்சுப்புல். (புறநா. 257, உரை.) 3. Small bell shaped gold pendant worn in a girl's ear; 4. Pencil-shaped ornament suspended from the neck, worn by ūrāḷi women; 5. Folds, as of a woman's cloth when worn; |
குச்சு 4 | kuccu, n. <>kūrca. cf. Mhr. kucā. Weaver's long brush with which the warp threads when laid out between trestles are separated from one another; பாவாற்றி என்னும் நெசவுக்கருவி. குச்சென நிரைத்த யானைக்குழாம் (சீவக. 1153). |
குச்சுக்கட்டு | kuccu-k-kaṭṭu-, v. tr. <>guccha +. To braid the hair; மயிர்முடித்தல். (W.) |
குச்சுக்காரி | kuccu-k-kāri, n. <>குச்சு2+. Lit., woman residing in a hut, a low prostitute; இழிந்த வியபிசாரி. |
குச்சுக்கெம்பு | kuccu-k-kempu, n. prob. குற்றி+. Ruby with convex surface; புறவிடம் மேடன சிவப்புரத்தினம். (C. G.) |
குச்சுப்பிடி - த்தல் | kuccu-p-piṭi-, v.tr.<>குச்சு3+. 1. To make folds in cloth when putting it on; ஆடையைக் கொய்துவைத்தல். 2. To make tassels; |
குச்சுப்புல் | kuccu-p-pul, n. <>id. +. 1. Cluster-grass, Cynosurus indicus; ஒருவகைப்புல். குச்சுப்புல் நிரைந்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும் (புறநா. 257, உரை). 2. Tassel of grass; |
குச்சுப்புற்சாத்து - தல் | kuccu-p-puṟ-cāt-tu-, v. tr. <>குச்சுப்புல்+. To wipe an idol with fine grass; விக்கிரகத்தைக் குச்சுப்புல்லாற் சுத்தஞ்செய்தல். (W.) |
குச்சுமட்டை | kuccu-maṭṭai, n. <>குச்சு4+. 1. Painter's coarse brush; சித்திரகாரரின் கருவிவகை. 2. Brush used in whitewashing; |
குச்சுமணி | kuccu-maṇi, n. prob. குச்சு3+. A neck ornament of woman; மகளிர் கழுத்தணி வகை. Parav. |
குச்சுவாங்கு - தல் | kuccu-vāṅku-, v. tr. prob. குற்றி+. To polish gems in setting them in a stick; குற்றியிற் பதித்து இரத்தினங்களை ஒப்பஞ்செய்தல். |
குச்செறி - தல் | kucceṟi-, v. intr. <>கூச்சு+எறி-. To horripilate, bristle, as the hair of the bdoy from excitement; மயிர்சிலிர்த்தல். |
குச்சை | kuccai, n. cf. guccha. Fold or plait of a woman's cloth; கொய்சகம். (R.) |
குசக்கணக்கு | kuca-k-kaṇakku, n. <>குசம்1+. 1. Wrong, clumsy reckoning, pottering in calculation; குசவரில் கணக்குப்பார்க்கும் ஒருவகையினர். 2. A sub-sect among potters, as doing the duties of an acountant; |
குசக்கருவி | kuca-k-karuvi, n. <>id. +. Potter's implements; குயர்வர் உபயோகிக்கும் கருவி. |
குசக்கலம் | kuca-k-kalam, n. <>id.+. [M. kušakkalam.] Earthenware, potter's vessels; மட்பாண்டம். |
குசக்காணம் | kuca-k-kāṇam, n. <>id. +. Tax on potters; குயவர் செலுத்திவந்த பழைய வரி. (S.I.I. ii, 509.) |
குசக்குழாய் | kuca-k-kuḻāy, n. <>id. +. Brick tube; சுடுமண்ணாலான குழாய். Madr. |
குசத்தனம் | kuca-t-taṉam, n. <>id. +. Stupidity, dullness, used in contempt; அறிவீனம். |
குசத்தி 1 | kucatti, n. <>id. [M. kušatti.] A female potter. See குயத்தி. |
குசத்தி 2 | kucatti, n. prob. ku + šakti. Earth impregnated with soda; பூவழலை. (W.) |
குசத்தீவு | kuca-t-tīvu, n. <>kuša+. See குசைத்தீவு. . |
குசத்துவீபம் | kuca-t-tuvīpam, n. <>id. +. See குசைத்தீவு. . |
குசந்தனம் | kucantaṉam, n. <>ku-candana. red sandalwood. See செஞ்சந்தனம். (மலை.) |
குசப்புத்தி | kuca-p-putti, n. <>குசம்1+. Stupidity, dullness, as a term of contempt; மடமை. Colloq. |
குசம் 1 | kucam, adj. <> குயம். Pertaining to the potter's class, always, used as the first part of compounds such as குசக்கருவி, குசப்புத்தி; குயவற்குரிய. |
குசம் 2 | kucam, n. <>kuša. 1. Darbha. See தருப்பை. ஈரக் குசங்கள் கிழிக்குந்தொழிற் கேற்றவாலோ (பாரத. சம்பவ. 55). 2. Water; |
குசம் 3 | kucam, n. <>kuša. Tree; மரம். (சூடா.) |