Word |
English & Tamil Meaning |
---|---|
குடாரி 2 | kuṭāri, n. perh. kuṭhāra. Long pepper, m.cl., Piper longum; திருப்பலி. (மலை.) |
குடாவடி | kuṭā-v-aṭi, n. <>குடா+. Bear, as having crooked feet; வளைந்த அடியையுடை தாகிய கரடி. (திவா.) |
குடாவு | kuṭāvu, n. <>குட. See குடா, 2. (W.) . |
குடான் | kuṭāṉ, n. Thorny nail dye. See செம்முள்ளி. (மலை.) |
குடி 1 | kuṭiஇ n. <>கடி-. [M. kuṭi.] 1. Drinking; பருகுகை. பால்குடி மறந்த பிள்ளை. 2. Drink, beverage; 3. Drunkenness, in toxication; |
குடி 2 | kuṭi, n. cf. bhru-kuṭī. Eyebrow; புருவம். (பிங்.) |
குடி 3 | kuṭi, n. cf. kuṭi. [M. kuṭi.] 1. Ryot; குடியானவன். கூடு கெழீஇய குடிவயினான் (பெருந. 182). 2. Tenants; 3. Subjects, citizens; 4. Family; 5. Lineage, descent; 6. Caste, race; 6. Caste, race; 8. Town, village; 9. [T. K. kuṭi.] Abode, residence; |
குடி - த்தல் | kuṭi-, 11 v.tr. cf. kud. [K. kudi, M. kuṭi.] 1. [T. kuducu.] To drink, as from a cup, from the breast; பருகுதல். கடலைவற்றக் குடித்திடுகின்ற செவ்வேற் கூற்றம் (கந்தபு. தாரக. 183). 2. To inhale, absorb, imbibe, as air, tobacco, smoke; |
குடிக்கசூரி | kuṭi-k-kacūri, n. <>குடி4+U. gusūr. Neglignece or remissness of ryots; குடிகளின் அக்கரையின்மை. (C. G.) |
குடிக்காசு | kuṭi-k-kācu, n. <>id. +. A village cess; குடிவரி. (I. M. P. Cg. 1068.) |
குடிக்காடு | kuṭi-k-kāṭu, n. <>id. +. Village; ஊர். ஐவர்க்கு மைந்து குடிகாடு நல்குதியோ கூறு (பாரதவெண். வாசுதேவன்றூ. 69). (பிங்.) |
குடிக்காணம் | kuṭi-k-kāṇam, n. <>id. +. A feed paid by tenants; குடிவரி. (I. M. P. Cm. 22.) |
குடிக்காவல் | kuṭi-k-kāval, n. <>id. +. The ststem of village watch; ஊர்க்காவல். (G. Tn. D. 134.) |
குடிக்குச்சகுனி | kuṭikku-c-cakuṉi, n. <>id. +. Prickly poppy, s.sh., Argemone mexicana; குடியோட்டிப்பூண்டு. கொல்லைக்குப் பல்லி குடிக்குச்சகுனி. Pro. |
குடிக்கூலி | kuṭi-k-kūli, n. <>id. +. 1. House rent; வீட்டுவாடகை. 2. Hire; |
குடிக்கூலிக்கெடு - த்தல் | kuṭi-k-kūlikkeṭu-, v. tr. <>குடிக்கூலி+எடு-. To obtain for rent, as a house for hire, as a cart; வாடாகைக்கு வாங்குதல். Madr. |
குடிகாரன் | kuṭi-kāraṉ, n. <>குடி2+. Drunkard; குடியன். |
குடிகெடு - தல் | kuṭi-keṭu-, v. intr. <>குடி4+. To be utterly ruined, as a family; குடும்பம் அடியொடு அழிதல். குடிகெடினு நள்ளே னினதடியாரொடல்லால் (திருவாச. 5, 2). |
குடிகேடன் | kuṭi-kēṭaṉ, n. <>id. +. One who spoils the fair name of a family by his foul deeds; தீயொழுக்கத்தால் குலத்தையழிப்பொன். |
குடிகேடி | kuṭi-kēṭi, n. <>id. +. One who is the ruin of a family; குலத்தியழிப்பவ-ன்-ள். விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் (திருப்பு. 625). |
குடிகேடு | kuṭi-kēṭu, n. <>id.+. Ruin of a family; குடும்பநாசம். குதிரையின் மேல்வந்து கூடிடு மேற் குடிகேடு கண்டீர் (திருவாச. 36, 2). |
குடிகை 1 | kuṭikai, n. <>kuṭikā. 1. Hut made of leaves, hermitage; பர்ணசாலை. உண்டு கண்படுக்கு முறையுட் குடிகையும் (மணி. 6, 161). 2. Temple; |
குடிகை 2 | kuṭikai, n. prob. niṣkuṭīkā. Cardamon seed; ஏலவரிசி. (மலை.) |
குடிகை 3 | kuṭikai, n. kuṇdikā. Ascetic's pitcher; கமண்டலம். அரும்புனற் குடிகைமீது (கந்தபு. காவிரி. 49). |
குடிகொள்(ளு) - தல் | kuṭi-koḷ-, v. intr. <>குடி4+. To occupy, take possession of the mind, as a deity, to haunt, infest as demons, bats, snakes; to be deep-seated, as a chronic disease; நிலையாகத் தங்கியிருத்தல். குரைகழல்கள் குறுகினம் நன்கோவிந்தன் குடிகொண்டான் (திவ். திருவாய். 10, 6, 7). |
குடிகோள் | kuṭi-kōḷ, n. <>id. +. Ruining a family be deep laid schemes; உபாயஞ்சூழ்ந்து குடியைக் கெடுக்கை. உறுப்பறை குடிகோ ளலைகொலை (தொல். பொ. 258). |
குடிங்கு | kuṭiṅku, n. perh. kuṭi-ga. Bird; பறவை. கோட்டகம் பரிதியங் குடிங்கு கூடுமே (இரகு. நாட்டுப். 40). |
குடிச்செருக்கு | kuṭi-c-cerukku, n. <>குடி4+. 1. Pride of birth; குடிப்பிறப்பாலுண்டான கருவம். (W.) 2. Dense population; |