Word |
English & Tamil Meaning |
---|---|
குடிநிலை | kuṭi-nilai, n. <>id. +. Theme of extolling the greatness of a warrior's family; வீரக்குடியின் பழமையையும் அஞ்சாமையை யுங் கூறும் புறத்துறை (பு. வெ. 2, 14.) |
குடிநிலையுரைத்தல் | kuṭi-nilai-y-uraittal, n. <>id. +. See குடிநிலை. (புறநா. 290.) . |
குடிநீர் | kuṭi-nīr, n. <>குடி-+. 1. Drinking water; குடித்தற்குரிய நீர். இட்ட குடிநீ ரிருநாழி (பதினொ. க்ஷேத். 16). 2. Decoction, tincture, medicinal infusion; |
குடிநீர்த்திரவியம் | kuṭi-nīr-t-tiraviyam, n. <>குடிநீர்+. Ingredients of a tincture; கஷாயச் சரக்குகள். (பைஷஜ.) |
குடிப்படை | kuṭi-p-paṭai, n. <>குடி4+. Miltia, volunteer corps as oppsed to a mercenary army; குடிகளாலான சேனை. (W.) |
குடிப்பழி | kuṭi-p-paḻi, n. <>id. +. Stigma, disgrace, slur, disrepute, on family; குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை. காணிற் குடிப்பழியாம் (நாலடி, 84). |
குடிப்பழுது | kuṭi-p-paḻutu, n. <>id. +. See குடிப்பழி. (W.) . |
குடிப்பறையன் | kuṭi-p-paṟaiyaṉ, n. <>id. +. Barber who shaves Pariahs; பறையர்க்குச் சவரஞ்செத்ய்யும் அம்பட்டன். (M.M.) |
குடிப்பாங்கு | kuṭi-p-pāṅku, n. <>id. +. 1. See குடித்தனப்பாங்கு. . 2. Orderly or proper conduct of a farmer; 3. Usage, customs of cultivators or agriculturists; |
குடிப்பாழ் | kuṭi-p-pāḻ, n. <>id. +. 1. Ruin of a village owing to depopulation, one of three kinds of pāḻ, q.v.; குடிகள் விட்டுநீங்குதலால் ஊருக்கு உண்டாகும் அழிவு. 2. A deserted village; |
குடிப்பிள்ளை | kuṭi-p-piḷḷai, n. <>id. +. 1. A division of Pariahs, generally doing the duty of barbers; பறையருள் அம்பட்டவேலைசெய்யும் ஒரு சாரார். (E.T.) 2. Sects which trace their origin to particular castes and adopt their titles; |
குடிப்பிறப்பாளர் | kuṭi-p-piṟappāḷar, n. <>id. +. Persons of birth, of noble lineage; உயர்குடியிற்பிறந்தோர். குடிப்பிறப்பாளர் தங்கொள்கை யிற்குன்றார் (நாலடி, 141). |
குடிப்பிறப்பு | kuṭi-p-piṟappu, n. <>id. +. Noble birth, nobility, birth in a distinguished family; உயர்குடியில் தோன்றுகை. குடிப்பிறப்பழிக்கும் (மணி. 11, 76). |
குடிப்பெண் | kuṭi-p-peṇ, n. <>id.+. Woman of birth and respectability; wedded lawful wife; குலஸ்த்ரீ. (யாழ். அக.) |
குடிப்பெயர் | kuṭi-p-peyā, n. <>id. +. Family name as cēraṉ, cōḻaṉ, pāṇṭiyaṉ; சேரசோழ பாண்டியர் என்றாற்போல பிறந்த குலம்பற்றி வழங்கும் பெயர். (பன்னிருபா 145: சிலப் 1, 33, அரும்.) |
குடிபடை | kuṭi-paṭai, n. <>id. +. Inhabitants; குதிசனங்கள். Colloq. |
குடிபுகு - தல் | kuṭi-puku-, v. intr. <>id +. 1. To occupy a new home; வேறுவீட்டிற்கு வசிக்கச் செல்லுதல். 2. To immigrate, settle and coloize, seek a fresh refuge; 3. To occupy a newly built house with appropriate ceremonies to do house warming; |
குடிபோ - தல் | kuṭi-pō-, v. intr. <>id. +. 1. To remove oneself to a new home; வேறு வீட்டிற்கு வசிக்கச்செல்லுதல். 2. See குடிபுகு, 3. 3. To quit, give up, abandon, as a house; 4. To emigrate, flee from home; 5. To evaporate, escape, as essential oil, camphor; |
குடிமக்கள் | kuṭi-makkaḷ, n. <>id. +. 1. Sub-castes rendering service in a village, being 18 in number, viz.,, வண்ணான், நாவிதன், குயவன், தட்டான், கன்னான், கற்றசன், கொல்லன், தச்சன், எண்ணெய்வாணிகன், உப்புவாணிகன், இலைவாணிகன், பள்ளி, பூமாலைக்காரன், பறையன், கோவிற்குடியான், ஒச்சன், வலையன், பாணன்; பணிசெய்தற்குரிய பதினெண்வகைக் கிராமக்குடிகள். (W.) 2. Slaves; |
குடிமக்கள்மானியம் | kuṭi-makkaḷ-māṉi-yam, n. <>id. +. Land given free of rent ot washermen, barbers, etc., for the services rendered bythem to villagers; பணிசெய்யும் வண்ணான் அம்பட்டன் முதலிய குடிமக்கட்கு விடப்பட்ட இறையிலி நிலம். |
குடிமகன் | kuṭi-makaṉ, n.<> id +. 1. Person of noble birth; நற்குடிப்பிறந்தவன். பொருளைக் குடிமகனல்லான்கை வைத்தல் (பழமொ. 209). 2. A slave owning perpetual hereditary allegiance to a landlord under certain conditions; 3. Hired servant, one whose wages are paid by grain. See 4. Barber; |