Word |
English & Tamil Meaning |
---|---|
குத்தியோட்டம் | kutti-y-ōṭṭam, n. <>id. +. Fulfiment of a vow by going round a temple with sharp spikes thrust on the sides; இரண்டு விலாப்பக்கங்களிலும் கூரான கம்பிகளைக் குத்திக் கொண்டு கோயிலை வலம்வரும் ஒரு பிராத்தனை. Loc. |
குத்திரக்காரன் | kuttira-k-kāraṉ, n. <>kṣudra +. Deceitful carfy fellow; வஞ்சகன். |
குத்திரப்பேச்சு | kuttira-p-pēccu, n. <>id. +. Sarcastic language, cutting speech; இகழ்ந்துரைக்குஞ் சுடுசொல். |
குத்திரம் 1 | kuttiram, n. <>kṣudra. 1. Deceit, guile, craftiness; வஞ்சகம். (திவா.) 2. Vileness, baseness; 3. Sarcasm, irony, cutting speech or allusion, insinuation; 4. Cruelty, inhumanity; |
குத்திரம் 2 | kuttiram, n. <>ku-dhra. Hill, mountain; மலை. (பிங்.) |
குத்திரம் 3 | kuttiram, n. cf. kaṭu-tikaka. Sunn-hemp. See சணல். (மலை.) |
குத்திரவித்தை | kuttira-vittai, n. <>kṣudra +. 1. Cratifiness, subtlety; knavery; தந்திரம். 2. Sorecry, black magic; |
குத்திருமல் | kuttirumal, n. <>குத்து-+இருமல். Whooping cough, Pertussis; கக்குவா னிருமல். (M. L.) |
குத்திலை | kuttilai, n. <>id. + இலை-. Cup made of leaf; தொன்னை. Loc. |
குத்தினி | kuttiṉi, n. <>U. khutnī. [Mhr. khutanī.] A kind of striped silk; ஒருவகைப்பட்டுச்சீலை. (W.) |
குத்தீட்டி | kuttīṭṭi, n. <>குத்து-+ஈட்டி. Poniard; ஈட்டி விசேடம். (W.) |
குத்து - தல் | kuttu-, 5. v. cf. குற்று-. tr. 1. To puncture, pierce, bore, perforate; ஊசி முதலியவற்றால் துளையிடுதல். உன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1). 2. To stab, wound; 3. To sew; 4. To gore; 5. To strike with the fist, cuff, buffet, box; 6. To insert punctuation marks, to draw a line of dots; 7. To stamp, impress; 8. To pound, as in a mortar; 9. To ram down, as in a gun; 10. To pick off, pluck, as young coconuts; 11. To remove; 12. To peck, strike with beak, as a stork, a crow; 13. To feed on, pick up, as a bird; 14. To plant, set, fix in the ground; 15. To set on edge, as bricks in arching, terrcing; 16. To dig, break up hollow out; 17. To make cutting remarks; to use wounding words; 18. To pour out, as a liquid, in small quantities; 19. To afflict, injure; 20. To thwart, defeat, as a design; to oppose, as a measure or scheme; 21. To pain, ache, as the head; 22. To puke, vomit, belch up; |
குத்து | kuttu, n. <>குத்து-. [T. guddu, K. M. Tu. kuttu.] 1. Blow with the fist, cuff, buffet, box; கைமுட்டியால் தாக்கும் இடி. கைக்குத்தது படலும் (கம்பரா. முதற்போ. 176). 2. Thrust, stab, puncture, prick, incision, goading; 3. Pounding, as in a mortar; 4. Dot, point, stop, punctuation mark; 5. Acute pain, twinge, ache; 6. Handful; 7. Perpendicularity, steepness; 8. Inauspicious position, as of ahouse opposite to a street, or a well opposite to a doorway; |
குத்துக்கட்டை | kuttu-k-kaṭṭai, n. <>id. +. Log of wood planted as a prop; ஒன்றைத்தாங்குவதற்கு நட்டு நிறுத்தப்படும் கட்டை. |
குத்துக்கம்பி | kuttu-k-kampi, n. <>id. +. Wire used to pierce the ear or nose; காதுமுதலியன குத்துங் கம்பி. |
குத்துக்கம்பு | kuttu-k-kampu, n. <>id. +. Stick with a sharp end; நுனி கூர்மையான கழி. |
குத்துக்கரணம் | kuttu-k-karaṇam, n. perh. குட்டி+. Somersault; குட்டிக்கரணம். (w.) |
குத்துக்கரந்தை | kuttu-k-karantai, n. prob. குத்து+. A species of firebane, Brigeron obliquum; செடிவ¬. (W.) |