Word |
English & Tamil Meaning |
---|---|
குத்துப்புள் | kuttu-p-puḷ, n. <>id. +. The place where the puḷ in the game of tip cat fails on edge when struck; கிட்டிப்புள் செங்குத்தாய் விழும் இடம். (J.) |
குத்துப்போர் | kuttu-p-pōr, n. <>id. +. 1. The first layer of sheaves in a stack, placed with ears uppermost; செங்குத்தாகவைக்குவ் கதிர்ச்சூடு. (W.) 2. Boxing, fisticuffs; 3. Violent enmity; |
குத்துமதிப்பாய் | kuttu-matippāy, adv. <>id. +. Approximately; சுமாராய். குத்துமதிப் பாய் அதன் விலையைச் சொல். Colloq. |
குத்துமானம் | kuttu-māṉam, n. <>id. +. Brick-work just above an arch with bricks placed on edge; கட்டடக் கமானுக்குமேல் குத்தாகவைக்கும் செங்கல் வேலை. |
குத்துமி | kuttumi, n. <>id. +. Husk with bran, separated from rice by pounding; தவிடு சலிக்கப்பெறாத உமி. |
குத்துமுள் | kuttu-muḷ, n. <>id. +. Spur. See குதிரைமுள். (W.) . |
குத்துவல்லயம் | kuttu-vallayam, n. <>id. +. Hand javelin, opp. to eṟi-vallayam; கையிற்கொண்டு குத்துதற்கு உதவும் ஈட்டி. (W.) |
குத்துவலி | kuttu-vali, n. <>id. +. Shooting, pinching pain; இசிவுநோவு. தேகமெல்லாம் குத்துவலியாயிருக்கிறது. Colloq. |
குத்துவலை | kuttu-valai, n. <>id. +. A fishing net; மீன்பிடிக்கும் வலைவிசேடம். Parav. |
குத்துவா | kuttuvā, n. A herring, golden, glossed with purple, Pellona brachysoma; கடல்மீன்வகை. |
குத்துவாதை | kuttu-vātai, n. ஈkṣud-bādhā. Pain hunger; பசிவருத்தம். குத்துவாதை மிக நலிந்து (உத்தரரா. இராவணன்பிறப். 18). |
குத்துவாமீன் | kuttuvā-mīṉ, n. <>குத்துவா+. See குத்துவா. . |
குத்துவாள் | kuttu-vāḷ, n. <>குத்து-+. Poniard, dagger; உடைவாள். |
குத்துவான் | kuttuvāṉ, n. <>id. Needle, the word being used only at nights from a superstitions fear; பயங் காரணமாக ஊசிக்கு இரவில்வழங்கும் பெயர். Loc. |
குத்துவிளக்கு | kuttu-viḷakku, n. <>குத்து+. Standing brass lamp; நிலையாக நிறுத்தும் விளக்கு. குத்துவிளக்கெரிய (திவ். திருப்பா. 19). |
குத்துவெட்டு | kuttu-veṭṭu, n. <>குத்து-+. 1. Stabs and cuts, as in fighting with deadly weapons; சண்டையிற்படுங் காயங்கள். 2. Violent enmity; 3. Dots and strokes, as erasures; 4. Blemishes, as in coins from were and tear; |
குத்துனி | kuttuṉi, n. <>Mhr. khutanī. A cloth woven with a silk warp and cotton woof; பட்டுக்கலந்த துணிவகை. (G. Tj. D. 118.) |
குத்தூசி | kuttūci, n. <>குத்து-+ஊசி. 1. A pricker, bradawl; குத்திதைக்கும் ஊசிவகை. 2. Long needle used for thatching or hedging; 3. Testing needle for thrusting into a sack of grain and bringing out a few grains as a specimen; |
குத்தெனவிழு - தல் | kutteṉa-viḻu-, v. intr. <>குத்து+. (J.) 1. To fall headlong; தலைகீழாய் விழுதல். 2. To fall on edge or in a perpendicular position; |
குத்தோக்காளம் | kuttōkkāḷam, n. <>id. + ஒக்காளம். Vomiting attended with twisting pain in stomach; வயிற்றுப் புரட்டலோடு வரும் வாந்தி. Colloq. |
குத்பா | kutpā, n. <>U. khutba. 1. Sermon at a mosque after prayers on Fridays, on the feast day after Ramzan or Bakrid; மகமதியப் பள்ளியிற்சில விசேடநாட்களில் நிகழும் மதப்பிரசங்கம். 2. The day of such sermons; |
குதக்கு - தல் | kutakku-, 5. v. tr. See குதப்பு-. . |
குதகீலம் | kuta-kīlam, n. <>guda + kīla. Piles, hemorrhoids; மூலநோய். (பைஷஜ.181.) |
குதட்டு - தல் | kutaṭṭu-, 5. v. tr. 1. See குதப்பு-. குமுதவாய் குதட்டிப் பழங்கொ டத்தை (கல்லா. 49). . 2. To babble, prattle; |
குதநெகிழ்ச்சி | kuta-nekiḻcci, n. <>guda +. Prolapus; அண்டுதள்ளுகை. (பைஷஜ. 232.) |
குதப்பிரம்சம் | kuta-p-piramcam, n. <>id. See குதநெகிழ்ச்சி. (பைஷஜ. 232.) . |
குதப்பு - தல் | kutappu-, 5. v. tr. cf. உதப்பு-. To turn about food in the mouth, munch; மெல்லுதல். |
குதபகாலம் | kutapa-kālam, n. <>ku-tapa +. See குதம், 1. . |