English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alsatia
n. செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர், இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Alsatian
n. அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை, (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
Alsike
n. நறுமணப்புல்வகை.
Also
adv. கூட, கூடுதலாக, தவிர, அதுவன்றி, மேலும்.
Alt
n. (இசை.) உச்சக்குரல், உறுமேற்பாலை, உயர்ந்த மனப்பாங்கு.
Altar
n. பலிபீல்ம், வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம், வணங்குதற்குரிய இடம், மணமேடை, நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை.
Altarage
n. பலிபீடப்படையல்.
Altar-cloth
n. பலிபீட விரிப்பு.
Altar-piece
n. பலிபீடத்தின் பின்னணிக்கலை வேலைப்பாடு.
Altar-rails
n. பலிபீட வேலி.
Altar-stone
n. பலிபீடக்கல், பலிபீட நடுக்கல்.
Altar-tomb
n. பலிபீட மாடம்.
Altarwise
adv. பலிபீட நிலையில், வடக்கு தெற்காக.
Altazimuth
n. வான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி, அகட்டு முகட்டுமானி.
Alter
v. மாற்று, நிலைமாறச்செய, திருத்தி அமை, மாறுபடு.
Alterability
n. மாற்றியமைக்கக்கூடிய தன்மை.
Alterable
a. மாற்றக்கூடிய, மாறுபடும் தன்மையுடைய.
Alterant
n. அடிப்படை உயிரியக்கங்களில் மாறுதலை உண்டுபண்ணத்தக்க மருந்து, (பெ.) மாற்றக்கூடிய, மாறுபரம் தன்மையுடைய.
Alteration
n. மாற்றம், திருத்தியமைப்பு.