English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ichneumonfly
n. மற்றொரு பூச்சியின் முட்டைப்புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
Ichnography
n. நிலப்படம், நிலப்படங்கள் வரையும் கலை.
Ichnolite
n. புபைடிவ அடிச்சுவடு.
Ichnology
n. புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல்.
Ichor
n. கிரேக்கபுராணக் கதை வகையில் கடவுளர்களின் நாளங்களில் குருதியைப்போல் வடியுமட் நீர், (மரு) புண்ணீர், ஆண்யானையின் கன்ன மதநீர்.
Ichthyocall
a. மீன் பிசின்.
Ichthyoid
n. மீன் வகையைச்சேர்ந்த முதுகெலும்புள்ள உயிரினம், (பெயரடை) மீன்போன்ற.
Ichthyoidal
a. மீன்போன்ற.
Ichthyolatry
n. மீன் வழிபாடு.
Ichthyolite,
புதைபடிவ மீன்.
Ichthyology
n. மீனியல் நுல்.
Ichthyophagist
n. மீனுணி.
Ichthyophagy
n. மீன்தின்னும் வழக்கம்.
Ichthyornis
n. முன்னுழிப் பறவை வகை, மரபற்றுப் போன பல்லுடைய பறவைகளின் பேரினம்.
Ichthyosaurus
n. முன்னுழி அரக்கப்பல்லி வகை, மிகப்பெரிய தலையையும் கூம்பிய உடலையும் நான்கு துடுப்புகளையும் நீண்ட வாலையும் உடைய மரபற்றுப்போன கடல் வாழ் உயிரினம்.
Ichthyosis
n. மேல்தோல் கெட்டியாகிச் சுரசுரப்பாகிவிடும் நோய்வகை.
Icicle
n. உறைநீர்மணி, விழுநீர்த்துளி, உறைந்து மன்னும் பனித்துகள், வீழ்துளி வடிவப் பனிக்கட்டி.
Icing
n. உறைதல், குளிரவைத்தல், பண்ணியம் முதலியவற்றின் சர்க்கரை மேற்பொதி, விமானத்தின் மீது பனிப்படிவு.
Ickle a.
குழந்தை உலக வழக்கில் சின்னஞ்சிறிய.
Icon
n. உருவம், உருவச்சிலை, புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவம், புனிதச் செதுக்குவண்ண ஓவியம்.