English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Insect-power
n. பூச்சிகொல்லி, பூச்சி புழு வண்டு முதலியவற்றை விரட்டவோ கொல்லவோ பயன்படும் மருத்துத் தூள்.
Insecure,
பாதுகாப்பற்ற, காவலற்ற, நிலையற்ற, விழுந்துவிடக்கூடிய., இடிந்து விழக்கூடிய, நம்பமுடியா நிலையுடைய.
Inseminate
v. விதையூன்று, வித்திடு, வித்திட்டுப் பயிர்வளர், பண்பு செறிவி, திறம்தோய்வி, புகுத்து, செயற்கையாகப் பண்பூட்டு.
Insensate
a. புலணுனர்வற்ற, ஊறுணர்வில்லாத, சொரணையற்ற, உணர்ச்சியற்ற, நல்லுணர்வற்ற, மடத்தனமான.
Insensibility
n. அக உணர்ச்சியின்மை, கனிவின்மை, அசட்டை மனப்பான்மை, தன்வயமின்மை, உணர்விழப்பு.
Insensible
a. புலப்படாத, மிகநுட்பமான, உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற, அற்பமான, மதித்துணரத்தகாத, நினைவிழந்த, உணர்விழந்த நிலையுடைய, கவனியாத. தெரியாத, அக உணர்ச்சியற்ற, காழ்த்துப்போன, கிளர்ச்சியற்ற, சோர்வற்ற.
Insensitive
a. கூர் உணர்வற்ற, நுண்ணுணர்வுத் திறமில்லாத, சொரணையில்லாத.
Insentient
a. உணருந் திறமற்ற, உயிரற்ற.
Inseparable
a. பிரிக்கமுடியாத.
Inseparables
n. pl. இணைபிரியா நண்பர்கள், இணைபிரியாப் பொருள்கள்.
Insert
v. செருகு, இடையில் சேர், நுழைத்துவை, இடைக்குறிப்பாகப் புகுத்து.
Insert page
பக்கத்தைச் செருகு
Insertion
n..செருகுதல், இடையில் சேர்த்தல், நுழைத்தல், புகுத்தல், செருகிய பொருள், இடையிற் சேர்த்த பகுதி, அழகொப்பனை நுற்பின்னல், (உள்) தசை உறுப்பு முதலியவை இணைந்திருக்கும் முறை.
Inset
-1 n. இடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி,. சிறிய உள்வைப்புப் படம், வரைப்படத்துள் வரைப்படம், ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு, அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று.
Inset
-2 v. உள் வை, உள்ளீடு செய், உள்வரை, உட்படமாகச் சேர்.
Inshore
a. கரைக்கருகிலுள்ள, (வினையடை) கரைக்கு அருகில்.
Inside
-1 n. உள்ளிடம், உட்பக்கம், உட்பரப்பு, பாதையில் சுவருக்கு அருகான பக்கம், பொதுப்பாட்டையிலிருந்து விலகிய பாதைப்பக்கம், உட்பகுதி, நடுக்கூறு,. குடல், அடிவயிற்றின் உட்புறம், வண்டியில உள்ளிருக்கையில் பயணம் செய்பவர்.
Inside
-2 a. உள்ளாக இருக்கிற, உட்பக்கமான அமைந்த, உள்ளிடத்திலிருந்து வருகிற.