English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inspect
v. மேற்பார்வை செய், பணி முறையில் கண்காணி, கூர்ந்து தேர்ந்தாராய்.
Inspector
n. மேற்பார்வையாளர், காவல்துறை மேலர்.
Inspectorate
n. காவல்துறை மேலர் பதவி, மேற்பார்வையாளர்களின் தொகுதி, மேலர் ஆட்சி வரம்புக்குட்பட்ட வட்டகை.
Inspiration
n. உள்ளுயிர்ப்பு, மூச்சு உள் வாங்குதல், உள்உயிர்ப்பூட்டுதல், அகத்தூண்டுதல், துணையூக்கம், தெய்விக அகத்தூண்டுதல், அருட்கிளர்ச்சி, திடீர் உள் தூண்டுதல், திடீர்க்கிளர்ச்சி எண்ணம், அகத்தூண்டுதலால் ஏற்படும் செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய மூலம்,. கிளர்ச்சியூட்டும் உள்ளார்வக் கொள்கை.
Inspirator
n. வளிவாங்கி, காற்று அல்லது நீராவியை உள்வாங்கும் கருவி, காற்றுட்டு கருவி.
Inspire
v. மூச்சு உள் இழு, மூச்சு உள்வாங்கு, உயிர்ப்பூட்டு, அகத் தூண்டுதலளி,. தெய்விக ஊக்கமளி, உணர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, உணர்சசி புகட்டு, உணர்ச்சியைத் தோற்றுவி.
Inspired
a. தெய்விக உள்ளுக்கம் பெற்டற, அகத்தூண்டுதலளிக்கப்பட்ட, உயிர் உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட, மேல்நிலை மறை தூண்டுதலுக்குரிய, மேலிடத் தூண்டுதலுக்குரிய.
Inspirit
v. உயிர்ப்பி, உணர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, ஊக்கு.
Inspissate
v. கெட்டியாக்கு, தடிப்பாக்கு, உருச்சுருக்கு.
Instability
n. நிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு.
Instal, install
பதவியில் அமர்த்து, வினைமுறைகளுடன் பணியில் ஏற்றிவை, நிலைநாட்டு, நிறுவு, கருவியை அமைவில் பொருத்திச் சித்தஞ்செய்.
Installation
n. அமர்த்தல், வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம், பயனுறுநிலை இணைப்பு, முழுநிறை கருவிகல அமைவு.
Instalment
n. தவணை, தவணைப்பணம், தொடர்கதை வௌதயீடு முதலியவற்றின் வகையில் தொகுதி, வௌதயிட்டுக் கூறு.
Instance
n. எடுத்துக்காட்டு, சான்றுநிகழ்ச்சி, குறிப்பீடு, தூண்டுரை, (சட்) வழக்கின்படிமுறை, (வினை) சான்றாகஎடுத்துக்காட்டு, சான்றுதரும் செய்தியாக எடுத்துக்கூறு,. குறிப்பிடு.
Instancy
n. அவசரம், படுவிரைவு.
Instant
n. நொடி, காலநுட்பம், உடனடிவேளை, மிகக்குறுகிய நேரவிலை, சரிநுட்பநேரம், (பெயரடை) உடனடியான, மிக அவசரமான, நடைமுறை மாதத்தைச் சார்ந்த.
Instantane
n. கணநேரக் காட்சி நிழற்படம், சிலவரிகளில் எழுத்பப்படும் சுருக்கக் கட்டுரை.
Instantaneous
a. உடனடியான, கணத்தில் நிகழ்கிற, உடனடியாகச் செயற்படுகிற.
Instanter
adv. பாதுகாப்பாளர் பொறுப்பின் கீழ்.
Instauration
n. மீட்டமைவு, முன்னிலை மீட்டமைத்தல், புதுமீட்பமைவு, புதுப்பித்தாக்கப்படும் நிலை.