English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Instead
adv. பகரமாக, பதிலாக, ஈடாக, ஒன்றன் இடமாக, பிரதியாக.
Instep, n,.
புறவடி, பாதத்தின் மேற்பகுதி, புதைமிதியின் புறவடிப்பகுதி, புறவடி வடிவுடைய பொருள்.
Instigate
v. பின்னின்று தூண்டிவிடு, தீமை ஏவு, கிளர்ச்சிக்குத் தூண்டு, கொலை முதலிய செயல்களுக்கு மறை தூண்டுதலளி.
Instil, instill
துளித்துளியாக விடு, சிறிது சிறிதாகப் புகட்டு, படிப்படியாக அறிவுறுத்து, சிறிதுசிறிதாகப பண்புதோய்வி.
Instillation
n. சிறிதுசிறிதாக வடித்தல், அறிவு புகட்டுதல், உள்ளத்தில் பண்பு பரவவிடுதல், புகட்டப்பட்ட பண்பு.
Instinct
-1 n. இயல்புணர்ச்சி, இயற்கை அறிவு இயலெழுச்சி, உள்ளார்ந்த உந்துணர்வு, இயற்றுண்டுதல், இன உணர்வு, அறிவுநிலையுடையன போலக் காணப்படும் திட்ட அறிவற்ற விலங்கினங்களின் இயல்பான செயற்பண்பு, இயலறிவுத்திறம், உணர்வற்ற நிலைச் செயல்தூண்டுலுக்கும முழு அறிவுணர்வுத் தூண்டுதல
Instinct, (2) a.
உள்ளுறித்தோய்ந்த, நிரம்பி உட்பொதிந்துள்ள, பொதுளித் ததும்பிய.
Institute
n. நிறுவனம், கழக முறை அமைப்பு, குறிப்பிட்ட நோக்கத்துக்குரிய நிலையான வளர்ச்சித்திட்ட ஏற்பாடு, இலக்கிய மெய்விளக்கத்துறை அமைப்பு, கல்வி கலை ஆய்வு புத்தாய்வுகளுக்குரிய நிலையம், நிலையக் கட்டிடம், (வினை) ஏற்படுத்து, நிறுவு, தொடங்கிவை, ஏற்பாடு செய், அமர்த்து.
Institute
நிறுவலகம், நிலையம், நிறுவனம்
Institutes
n. pl. சட்டமூலத் தொகுப்பு.
Institution
n. ஏற்படுத்துதல், நிறுவுதல், நிலையம், பொது நோக்கத்துக்கான அமைப்பு, நிலையக்கட்டிடம், நிலையான ஏற்பாடு, நிலையான ஒழுங்கமைப்பு முறை, நிலவர நிதி அமைப்பு, அறிவு கற்பிக்கும் ஏற்பாடு, பின் மரபினர் அமர்த்தீடு, சட்ட அமைப்பு, பழக்க வழக்க மரபு, விதிகளின் தொகுப்பு, சமய முதல்வரால் குருமாரிடம் ஒப்படைக்கப்படும் ஆன்மநலப் பணிப்பொறுப்பு, (பே-வ) நன்கு தெரியப்பட்டவர், நாடறிந்த செய்தி.
Institutional
a. அமைப்பாக வகுக்கப்பட்ட, நிறுவனமாகச் செயலாற்றுகிற, அமைப்பு மூலமான, அமைப்பு வழியாகச் செயலாற்றுகிற.
Institutionalize
v. அமைப்புமுறைக்குட்படுத்து, அமைப்பு முறை ஆக்கு,. நிலையாகச் செயற்படுவி.
Instruction
n. கற்பித்தல், அறிவுறுத்துதல், அறிவூட்டல், போதனை.
Instructions
n. pl. செயல்துறைக்கட்டளை, மேலாளர் செயல்முறைப்போதனை, நெறிமுறைக் கட்டளைத்தொகுதி, வழக்கறிஞரிடம் தரப்படும் விவரக் கட்டளை.
Instructive
a. அறிவுரை வழங்குகிற, அறிவுறுத்துகிற, நல்லறிவு கொளுத்துகிற, அறிவூட்டத்தக்க, படிப்பினை அளிக்கிற.
Instrument
n. செயற்கருவி, துணைக்கலம், துணைப்பொருள், கருவியாக உதவும் சாதனம், கருவியாககப் பயன்படுபவர், கையாள், இசைக்கருவி, இசையொலி எழுப்பும் சாதனம், ஒப்பந்தப்பத்திரம், பதிவேடு, பத்திரம், (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
Instrumental
a. கருவியாகப் பயன்படுகிற, துணைச்சாதகமான, கருவிசார்ந்த, கருவியிலிருந்து எழுகிற, ஏதுவான, காரணமான, இசைக்கருவிகளால் எழுப்பப்படுகிற.
Instrumentality
n. துணைமை, துணைப்பொருள், இடைச்சாதனம், நிமித்தகாரணம்.