English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inside
-3 adv. உட்புறமாக, உட்பக்கததில், உள்ளாக, உள்ளே, உட்புறத்தில், உட்பக்கமாக.
Insider
n. அகத்தார், அக உறுப்பினர், சங்கம் அமைப்பு முதலியவற்றில உள்ளிருப்பவர், இரகசியத்தை உணர்ந்தவர்.
Insidious
a. உட்கவடான, நயவஞ்சகமான, ஆழ்ந்த திட்ட மிட்டுச் சதிசெய்கிற, மறைந்து பழி சூழ்கிற, தீயநோக்குடன் மெல்ல முன்னேறுகிற, பழியுட்கரந்து மெல்லப் படிப்படியாக வளர்க்கிற, பழிசூழ்ச்சி வாய்ந்த, நம்பவைத்து ஏய்க்கிற.
Insight
n. உள்நோக்கு, நுழைபுலம், நுள்ணறிவுத் திறம்.
Insignia
n. pl. விருதுச்சின்னங்கள், சிறப்புரிமைச் சின்னங்கள், அறிகுறி அடையாளம்.
Insignificant
a. குறிப்பிடத்தக்கதல்லாத, சிறப்பில்லாத.மிகச் சிறுதிறமான, அற்பமான.
Insincere
a. வாய்மையற்ற, உள்ளொன்று புறமொன்றான், கபடமான, வஞ்சமான.
Insinuate
v. சாட்டிக்கூறு, மறைமுகமாகக் குறிப்பிடு, சுட்டிக்குறைகூறு, மெல்ல நயம்படப்புகுத்து, தயவுக்குப் பாத்திரமாக்கு, மெல்லநுழை, பசப்பி ஆதரவுபெறு.
Insipid
a. சுவையற்ற, கிளர்ச்சியற்ற மந்தமான, கவர்ச்சியற்ற.
Insist
v. ஊன்றி அழுத்தமாகக்கூறு,. வற்புறுத்து, விடாப்பிடியாக வேண்டு,. தனிமுக்கியத்துவம் கொடு.
Insobriety, nl.
மதிமயக்கம், குடிமயக்கம்.
Insolation
n. சூரியபுடம், வெயிலிற்படும்படி வைத்தல், வெயிலில் வைத்து வண்ணம்போக்குதல், வெயில் மருத்துவச் சிகிச்சை, நோய்தரும் வெயில்காய்வுநிலை.
Insolent
a. மதியாமல் பேசுகிற, திக்காரமான, திமிரான, துடுக்குத்தனமிக்க.
Insoluble
a. கரைக்கமுடியாத, விடை கண்டறியமுடியாத.
Insolvency
n. வகையற்ற நிலை, நொடிப்பு.
Insolvent
n. பட்ட கடனைத் தீர்க்க ஆற்றலற்றவர், நொடித்தவர், (பெயரடை) கடன் தீர்க்க முடியாத, வகையற்ற, நொடித்தவர்க்குரிய.
Insomnia
n. துயிலொழிவு, உறக்கமின்மை நோய்.
Insomuch
adv. என்ற அளவிற்கு., என்ற அளவில்.
Insouciant
a. புறக்கணிப்பான, அக்கறையற்ற, கவலையற்ற, கவனமற்ற.
Inspan
v. வண்டியின் நுகத்தடியில் எருதுகளைப் பூட்டு, வண்டியைப் பயணத்துக்குச் சித்தமாக்கு.