English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Oil-plant
n. எண்ணெய்ச் செடி.
Oil-press
n. செக்கு, செக்காலை.
Oils
n. pl. மெழுகுத்துணி, எண்ணெய் வகைகள்.
Oilskin
n. நீத்தடைக்காப்புச் செய்யப்பட்ட மெழுகுத்துணி, மெழுகுத்துணி ஆடை.
Oilskins
n. pl. எண்ணெய்த் துணியாலான முழு உடைத்தொகுதி.
Oil-spring
n. எண்ணெய் ஊற்று.,
Oil-stone,
எண்ணெய் ஊட்டப்பட்ட தீட்டுக்கல், சாணைக் கல்.
Oil-tanker
n. எண்ணெய்க்கப்பல்.
Oily
a. எண்ணெய் சார்ந்த, எண்ணெய் போன்ற, புகழ்ந்து பசப்புகிற, குழைந்து நடிக்கிற, நயமாக இணைத்துக்கொள்கிற.
Oireachtas
n. அயர்லாந்து சட்ட மாமன்றம், இரு அயர்லாந்து பேரவைகளுடன் தலைவரும் கூடிய தொகுதி.
Okapi
n. ஒட்டைச்சிவிங்கி போன்ற வள்ள அமைப்புக்களையுடைய நடு ஆப்பிரிக்க மாட்டிய விலங்குவகை, வரிமான் வகை.
Old
a. பழைய, பழங்காலத்திய, பழமைப்பட்டுவிட்ட, பழம்பாணியான, பழமைப்பட்ட, காலங்கடந்துவிட்ட, வழக்காறற்றுப்போன, வழங்கிக்கழிந்த, பழகிய, பழகிப்போன, நீடித்த, நீடித்து வழங்கிய, முற்பட்ட, முந்திய, முன்னோர்களுக்குரிய, அனுபவமிக்க, தேர்ச்சிமிக்க, முதிய, வயதுசென்ற, வயதுடைய, மூப்பால் தளர்வுற்ற, கிழடு,. தட்டிய, அறிவு முதிர்ச்சியுடைய.
Old Bailey
லண்டன் குற்ற இடைநிலைத் தீர்ப்பு மன்றம்.
Olden
a. (செய்) முற்காலத்திய, பழங்காலத்திய, பண்டைநாளைய, (வினை) மூப்பால் தளர்வுறு, முதுமையால் தளர்வுறுத்து,
Oldster
n. இளமைநிலை கடந்தவர்.
Oleaginous
a. எண்ணெய் உண்டபண்ணுகிற, எண்ணெய் சார்ந்த, நெய்மப்பசையுடைய, கொழுப்பார்ந்த, கொழுப்புப் பண்புடைய, எண்ணையின் இயல்புடைய.