English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Overcrop
v. விடாது தொடர்ந்து பயிரிடுவதனால் நிலத்தை வறிதாக்கு.
Overcrow
v. வெற்றிவீறாப்புப் பேசு, வெற்றி இறுமாப்புடன் நட.
Overcrust.
v. திண்ணிய புற ஏட்டினால் மூடு, கடுமையான மேலுறையிற் பொதி, ஏடுமேற் படிந்திரு.
Over-cunning
n. அளவுமீறிய சூழ்ச்சித்திறம், தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்.
Over-curious
a. பிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற, மிகவும் எச்சரிக்கையுள்ள, எளிதில் மனநிறைவு அடையாத.
Overdo
v. அளவுமீறிச் செய், வரம்புமீறிச்செல், ஆற்றல் எல்லைமீறி உழைக்கச்செய், அளவுமீறிப் பக்குவங்கெடச்செய்.
Overdoor
n. கதவுமேல் ஒப்பனை.
Overdraft
n. பொருளகத்தில் இருப்புக்குமேல் பணம் எடுப்பு, பொருளகக் கணக்குவகையில் மிகைப்படுத்திக் கூறு.
Overdress
-1 n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி.
Overdress
-2 v. வரம்புமீறிப் பகட்டாக உடையணி.
Overdrive
v. களைப்படையும்படி குதிரையை ஓட்டு, களைப்புறும்படி ஆளை வேலைவாங்கு.
Over-estimate
-1 n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி.
Over-excited
a. மிகு உணர்ச்சி வசப்பட்ட, மிகு உண்ணதிர்வுடைய.
Overfall
n. நீரோட்டச் சந்திப்புக்களால் ஏற்படும் கொந்தளிப்பான கடற்பரப்பு, நீரடிப் பாறையருகே நீரோட்டத்தினால் ஏற்படும் கொந்திளிப்பான நீர்ப்பரப்புப் பகுதி, கொந்தளிப்பான நிர்ப்பரப்பு, திடீர்ச் சூழ்நிலை, மிகைநீர்வடி அமைவு, நீர்ப்பூட்டுத் தளநிலை காக்கும் மதகு.
Overfault
n. (மண்) எறிதிசை வழிச்சாய்வுடைய எதிர்நில மடக்கு.
Overfish
v. நீர்நிலையில் வரம்பின்றி மின்பிடித்து வறிதாக்கு.
Overflow
-1 n. பொங்குவளம், பொங்கி வழிந்தோடுவது, தேவைக்கு மேற்பட்டது.
Overflow
-2 v. பொங்கி வழி, நிலமீது வௌளமாகப் பெருகு, மக்கள் கூட்டம் வகையில் அறைகள் முதலிய இடயெல்லைகளைக் கடந்து பரவு, கொள்கலன்-கிண்ணம் முதலியவை வகையில் நிறைந்து வழி, உணர்ச்சி ததும்பி வழிந்தோடு, செல்வம் கொழி.
Overfold
-1 n. (மண்) நடுப்பகுதி தலைகீழாக மாறிய பாறைப்படுகை மடிப்பு.
Overfold
-2 v. (மண்) உண்மடி, பாறை மடிப்பினுள் மடிப்பாக மடிப்புறு.