English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rattan
n. பிரம்புப்பனை, பிரப்பங்கழி.
Rat-tat, ratatat, rat-tat-tat n.
கதவுப்பிடியின் தட்டொலி.
Ratten
v. தொழிற்கருவி கெடுத்துத் தீங்குசெய், கருவியழிவுவேலையால் தொழிலாளர்க்குக் குந்தகஞ் செய், கருவியழிவலாரல் தொழில் முதல்வாக்கு நட்டம் உண்டுபண்ணு.
Ratter
n. எலிகளைக் கொல்பவர், எலிகளைப் பிடித்துக் கொல்லும் நாய், இடர்நேருங்கால் கட்சியை விட்டொடுபவர்.
Rattle
n. கிலுகிலுப்பை, கிலுக்கு விளையாட்டுக்கருவி, நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள், கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை, கலரகல ஒலி, ஆரவாரம், ஆர்ப்பாட்டம், மகிழ்ச்சிக் கூக்குரல், பிதற்றல், சலசலப்பு, வம்பளப்பு, இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர், (வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய், கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு, கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய், ஆராயவெற்றுப்பேச்சு பேசு, சடசட என்று ஓட்டு, சடசடவென்று விப, கடகடவென்று ஓடு, விரைந்து இயக்கு, விரைந்து செல், விரைந்து பேசு,. கடகடவென்று கூறு, விடாது ஒப்புவி, கிளர்ந்தெழு, ஆரவாரஞ் செய், (பே-வ) தூண்டிஎழுப்பு, கிளாச்சியூட்டு, மி கலக்கமுண்டுபண்ணு, அச்சுறுத்து, வெருட்டு, அச்சுறுத்தித் துரத்து, விரைவுபடுத்
Rattle snake
n. சங்கிலிக்கறுப்பன் எனும் பாம்புவகை, வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள்வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
Rattle,-bag
கிலுகிலுப்பை.
Rattle-bag
n. கிலுகிலுப்பை.
Rattle-bladder
n. மெல்லிய தோற்பைக் கிலுகிலுப்பை.
Rattle-bladder,
மெல்லிய தேற்பைக் கிலுகிலுப்பை.
Rattle-box
n. பெடடி வடிவக் கிலுகிலுப்பை.
Rattle-brain
n. வெற்றுமூளையர், அறிவற்றவர்.
Rattle-head
n. குடுகுடுப்பையர், வெற்றுரையாடுபவர்.
Rattle-plate
n. வெறுமூளையர், எளிதில் குணம் மாறுபவர்.
Rattler
n. குடுகுடுப்பையர், வெற்றுரையாடுபவர், சரசரவென்று நடப்பவர், விரைவாக வண்டியாட்டுபவர், (பே-வ) வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள் வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்புவகை, செம்மையான அடி, இனத்தின் மிகச் சிறந்த உருமாதிரி.
Rattletrap
n. ஆட்டங்காணும் வண்டி, ஓட்டை உடைசலுடன் ஆட்டங்கொண்டுஇயங்கும் பொருள், (பெயரடை) ஓட்டை உடைசல்களுடன் ஆட்டங்காணுகிற.
Rattletraps
n. pl. விந்தைத் துண்டு துணுக்குப் பொருள்கள், ஓட்டை உடைசல்கள்.
Rattling
a. தடதட என ஒலிக்கிற, சுறுசுறுப்பான, (வினையடை) குறிப்பிடத்தக்க வகையில்.
Rat-trap
n. எலிப்பொறி, மிதிவண்டியின் பற்களமைந்த மிதிப்படி.
Ratty
a. எலிபோன்ற, எலிகளாற் பீடிக்கப்பட்ட, துயர மிகக் நிலையில், உள்ள, சிடுசிடுப்பு வாய்ந்த, எளிதிற் சினங் கொள்ளுகிற.