English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Raucous
a. கரகரப்பான, கம்மிய, கரட்டொலியுடைய.
Raughty a.
(பே-வ) நுகர்ந்து மகிழ்தற்குரிய, வேடிக்கையிலுங் கிளர்ச்சியிலும் விருப்பமுடைய.
Ravage
n. pl. அழிவிளைவுகள், சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
Ravages
n. pl. அழிவளைவுகள், சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
Rave
-1 n. வண்டியின் கைப்படிக் கம்பியழி.
Rave
-2 n. சீற்ற ஆர்ப்பரிப்பு, காற்றின் குமுறல், ஆர்ப்பொலி, (வினை) வெறிகொண்டு ஆர்ப்பரி, மூர்க்கமாகப்பேசு, காற்று வகையில் கொந்தளித்தெழு, கடல்வகையிலர் கொந்தளித்தோலமிடு, மட்டுமீறிப் பாராட்டிப்பேசு, எல்லைமீறி மகிழ்ந்தார்ப்பரி, உளறு, பிதற்றுரையாடு.
Ravel
n. சிக்கல், முடிச்சு, சிதர்முனை, தேய்ந்து சிதைந்து ஓரம், (வினை) சிக்கலராக்கு, குழப்பு, சிக்கிக்கொள், சிக்கல் நிலை பெருக்கு, நுல் முறுக்கவிழ், சிக்கலகற்று, கூறாகப் பிரிடித்துக்காண்.
Ravelin
n. முற்றுகையிட்ட அரண்முன் உள்ள இருமுக அகழி.
Raveling
n. முறுக்கவிழ்ப்பு, முறுக்கவிழ்ந்த நுல்.
Raven
-1 n. அண்டங்காக்கை, (பெயரடை) அண்டங்காக்கையைப் போலக் கரிய.
Raven
-2 v. கொள்ளையிடு, கொள்ளையடித்துக்கொண்டு செல், இரை தேடித் திரி, கெர்ளளைப்பங்கு நடிச்செல், பெருந்தீனி கொள், கடும்பசியுடையவராயிரு.
Ravenous
a. இறாஞ்சுகிற, கொடுங் கொள்ளையிடுகிற, பெருந்தீனி கொள்கிற, பெருந்தீனி அவாவுகிற, கடும்பசியுள்ள.
Raves
n. pl. செருகுதட்டி, வண்டியின் கொள்ளவை அதிகப்படுத்த அதன் பக்கங்களில் நிலையாக அல்லது தற்காலிகமாக இணைக்கப்படும் பனிச்சட்டம்.
Ravin
n. (செய்) வழிப்பறி, கொள்ளை, வேட்டை, இரைகவர்வு, கொண்டி.
Ravine
n. குறுகிய மலையிடுக்கு, இடுக்குவழி, இடுங்கிய கணவாய்.
Ravined
a. நீர் அரித்தோடிய இடுக்குகளையுடைய,நெடுவிடர்கள் அமையப்பெற்ற.
Raving
n. pl. சன்னிப்பிதற்றல்கள், தொடர்பற்ற அல்லது முறையற்ற பேச்சு.
Ravish
v. வன்முறையாகத் தூக்கிக்கொண்டு செல், வாழ்வினின்று பறித்துக் கொண்டுபோ, கண்காணாமற் கொண்டு செல், கற்பழி, வசியப்படுத்து, தன்வயமிழக்கச் செய்.
Ravishing
a. பரவரப்படுத்துகிற, கவர்ச்சியூட்டுகிற.
Raw
n. உடலில் தோலுரிக்கப்பட்ட இடம், புண்ணான இடம், கூகூருணர்ச்சியுள்ள இடம், (பெயரடை) சமைக்கப்படாத, பச்சையான, கைவினைப்படா நிலையிலுள்ள, படைத்து உருவாக்கப்படாத, முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத, செப்பமற்ற, அனுபவமில்லாத, பயிற்சிபெறாத, திறமையற்ற, துறைக்குப்புதிய, தோல் உரிக்கப்பட்ட, சதை தெரியும்படியுள்ள, தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட, பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய, குளிர்மிக்க, இர நயப்புமிக்க, (வினை) தேய்த்துப் புண்ணாக்கு, குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு.,