English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shipowner
n. கப்பல் உடைமையாளர், கப்பற் கழகப் பங்குரிமையாளர்.
Shippen, shippon
பசுமடம், மாட்டுக்கொட்டில்.
Shipper
n. கப்பல் வாயிலாகச் சரக்கு அனுப்பும் வணிகர், கப்பல் சரக்கு ஏற்றும் வணிகர், கப்பல் சரக்கு எடுக்கும் வணிகர்.
Shipping
n. கப்பலிலேற்றல், கப்பலேற்றுதல், கப்பலேற்றரவு, கப்பற்சரக்கேற்றம், கப்பற் சரக்கனுப்பீடு, கப்பற்போக்கு வரவு, கப்பல்தொகுதி.
Shipping-agent
n. கப்பலின் துறைமுகப்பணி முகவர், கப்பற் கழகத் துறைமுகப் பணிமுகபவர், கப்பல் வணிக நெறித்துறை முகப்பணிமுகவர்.
Shipping-articles
n. கப்பல் தலைவர்-பணியாள் ஒப்பந்தம், கட்டணம் முதலியன பற்றிக் கப்பல் மீகாமனுடன் கப்பலோட்டிகள் செய்துகொள்ளும் உடன்படிக்கை விதிகள்.
Shipping-master
n. கப்பற் பணி முதல்வர், கப்பலோட்டிகளின் ஒப்பந்தம்-சம்பளம் ஆகியவற்றைத் தன் பார்வையில் நடத்தும் அலவலர்.
Shipping-office
n. கப்பல் முதல்வர் பணிமனை, கப்பல் முதல்வர் பணிநிலை துறைமுகவர் பணிமனை, துறைமுகவர் பணிநிலை.
Ship-railway
n. கடலிடை இருப்புப்பாதை, கடலிலிருந்து கடலுக்கு நிலவழிக் கப்பல்களை எடுத்துச்செல்லும் இருப்புப்பாதை.
Ship-rigged
a. மூன்று பாய்மரங்களும் நாற்கட்டப் பாய்களும் விரிவார்ந்த மேடைகளும் கொண்ட.
Shipshape
a. கலச்செப்பமுடைய, கப்பலுக்கேற்ற நற்செவ்வி வாய்ந்த, செம்மை நலம் வாய்ந்த.
Ship-way
n. சாரத்தளம், கப்பல் கட்டுதற்கும் கடலில் செலுத்துவதற்கும் ஏற்றவாறு அமைந்து சாய்நிலைக் கப்பல் தளக்கட்டுமானம்.
Ship-worm
n. கப்பற்புழு, மரக்கலங்களைத் துளைக்கும் புழு வகை.
Shipwreck
n. உடைகலப்படுதல், கப்பல்தகர்வு, கப்பல் அழிபாடு, பாடழிவு, அழிபாடு, (வினை.) பாடழிவுறுத்து, பாடழிவுறு.
Shipwright
n. கப்பல் கட்டுபவர், கப்பல் தச்சர்.
Shipyard
n. கப்பல் கட்டுந்துறை, கப்பல் தொழிற் பட்டறை.
Shire
n. கோட்டம், பிரிட்டன் மாவட்டம்.
Shire-bred horse, shire-horse
n. பயிற்சியினப் பெருவண்டிச் குதிரைவகை.
Shiremoot
n. முற்பட்டகால மாவட்ட மன்றம்.
Shirk
n. தட்டிக்கழிப்பவர், பொறுப்பேற்காதவர், கடமையிலிருந்து கோழைத்தனமாகப் பின்னிடைந்து ஒதுங்குபவர், (வினை.) தட்டிக்கழி, உதறித்தள்ளு, மழுப்பிவிடு, கடமை நழுவவிடு, அற்பத்தனமாகப் பின்னிடைவுற, கோழைத்தனமாக ஒதுங்கு, போர்க்கடமையிலிருந்து தப்பமுயலு, பொறுப்பற்ற தன்மையுடன் நட.