English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Steeplechase
n. இடர்பல கடக்கும் குதிரை ஓட்டப்பந்தயம்.
Steeple-crowned
a. தொப்பி வகையில் நீடூசி முனைமுகட்டினையுடைய.
Steepled
a. தூபியினையுடைய, கோபுர வகையில் கூம்பினையுடைய, தூபி வடிவான, கூம்புவடிவான.
Steeplejack
n. தூபி முகடேறிப் பழுதுபார்ப்பவர்.
Steeple-top
n. குவி ஊற்றுவாய்களையுடைய துருவப்பகுதித் திமிங்கலம்.
Steeplewise
a. தூபி வடிவான,கோபுரக்கூம்பு வடிவான, (வினையடை.) தூபி வடிவாய், கோபுரக்வம்பு வடிவாய்.
Steeply
adv. செங்குத்தாய், திடுமென உயரும் நிலையில், தலைகீழாக.
Steepness
n. செங்குத்து நிலை, செங்குத்துயர்வு, செங்குத்து வீழ்வு, மிகுகடுமை.
Steepy
a. (செய்.) செங்குத்தான.
Steer
-1 n. காயடிக்கப்பட்ட எருது, காளை, விடை எருது.
Steer
-2 v. கப்பல்வகையில் திசையறிந்து செலுத்து, ஊர்திகள்-உந்துகலம் முதலியவற்றின் வகையில் இயக்குபடிமூலம் வழியறிந்து ஒட்டு, விமான வகையில் வழிப்படுதத்திச் செலுத்து, ஆள்வகையில் உடனிருந்து வழிகாட்டு, வழிக்கொண்டுசெல்த, திசையறிந்து திருப்பு, குறிப்பிட்ட திசையில் செலுத
Steerable
a. வழிகாட்டத்தக்க, திசையறிந்து திருப்பத்தக்க.
Steerage
n. வழிச்செலுத்துஞ் செயல், வழிச்செலுத்தும் அனுபவத் திறம், செயலாட்சித் திறம், நடத்துவதற்குரிய கருவிகல சாதனம், போர்க்கப்பல் வகையில் சிறதிறப் பணியாளர் தனியிடம், கப்பல் இயக்குமுறை இடம், பயின் கட்டையின் இயங்குதிற விளைவு, கப்பலின் போக்கமைவு, கப்பலின் குறைந்த கட்டணப் பகுதி, (பெ.) குறைந்த கட்டணப்பகுதிக்குரிய.
Steerage-way
n. பயின்கட்டை செயற்படுவதற்கு வேண்டிய கப்பலின் குறைந்த அளவு வேகம்.
Steerer
n. வழிகாட்டுவோர், வழிசெலுத்துவோர், திசைதிருப்புவோர்.
Steering
n. வழிச் செலுத்துகை, வழிதிருப்புகை, செயல் கட்டாட்சி, (பெ.) வழித்திருப்புகிற, வழிச்செலுத்துகிற, செயல்முறை கட்டுப்படுத்துகிற.
Steering-gear
n. இயக்கு கருவியமைவு.
Steering-wheel
n. உந்துகல இயக்காழி.
Steerling
n. விதையடித்த இளங்காளைக் கன்று.
Steersman
n. கப்பலின் இயக்குநர், செயல் இயக்குநர்.