English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Steersmanship
n. கப்பல் இயக்குதிறம், நடைமுறை இயக்குதிறம்.
Steeve
-1 n. (கப்.) தொடுவான் கோணம், கப்பல் முன்புற உந்துகோலுக்கும் அடிவானுக்கும் இடையேயுள்ள கோண நிலை, (வினை.) (கப்.) கப்பல் முன்புற உந்துசட்ட வகையில் தொடுவான் கோணிடு, முன்புற உந்து சட்டத்தினைத் தொடுவான் கோணிடுவி.
Steeve
-2 n. (கப்.) திணிகோல், கப்பலில் இடமமையச் சரக்குகளைத் திணித்துவைக்க உதவும் நீள் மரச்சட்டம், (வினை. ) திணிகோலால் திணித்துவை.
Steinberger
n. ரைன் ஆற்றுப் பகுதி வெண்மது வகை.
Steinbock
n. காட்டு வௌளாடு.
Stele
n. நடுகல், பெயர்வரி பொறித்த கல்லறைச் சிலை.
Stellar
a. விண்மீனுக்குரிய, உடுக்கள் சார்ந்த.
Stellate
a. விண்மீன் போல அமைவுற்ற, விண்மீன் போலப்புறநோக்கிய சினையுடைய.
Stellenbosch
v. (படை. இழி.) நயமுறை விலக்கீடு செய், புறக்கணித்து வை.
Stelliferous
a. விண்மீன் உட்கொண்ட, உடுக்கள் தாங்கிய, உடுக்குறியுடைய, உடுக்குறிகள் நிரம்பிய, உடு வடிவங்கள் கொண்ட.
Stelliform
a. விண்மீன் உருவாமன, உடுவடிவான.
Stellular
a. சிறு விண்மீன் வடிவான, சிறு விண்மீனுருக்கள் பதிக்கப்பெற்ற, சிறு விண்மீன் போன்ற.
Stellulate
a. சிறு விண்மீன் போன்ற.
Stem
-1 n. நடுத்தண்டு, உடற்பகுதி, மரவகைத் தண்டு, இலையடி, இலை-பூ-காய்-கனி வகைகளில் காம்பு, இடைத்தண்டு, தேறல் கலத்தின் உடற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட காம்புபோன்ற பகுதி, புகைக்குழாய் நிமிர் குழற்பகுதி, கைம்மணிப் பொறிகளின் சுழலுறுப்புக்கள் வகையில் மைய
Stem
-2 v. தடு, அணையிடு, எதிர்த்து முன்னேறு, திணித்து அடை.
Stemless
a. தண்டற்ற, காம்பற்ற.
Stemma
n. குடும்பக் கொடிவழி, கால்வழி, குலமுறை, (வில.) தனிநிலைக் கண், கூட்டுக்கண் தொகுதியில் சினைநிலைக்கண்.
Stemmed
-1 a. தண்டுடைய, தண்டுகற்றப்பட்ட, புகையிலை அடிக்காம்பு அகற்றப்பட்ட.
Stemmed
-2 v. 'ஸ்டீம்1, ஸ்டீம்2, என்பவற்றின் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.