English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trypanosome
n. உறக்க நோய் முதலிய உண்டு பண்ணும் குருதி ஒட்டுயிர் வகை.
Trypsin
n. கணையச்சுரப்பி நீரின் கருநிலை நொதிக்கூறு.
Trysail, n.,
(கப்) பகரப்பாய், புயற் காலத்தில் சிறுகலங்கள் பயன்படுத்தும் பாய்வகை.,
Tryst
n. இடந்தலைப்பாடு, குறியிடச் சந்திப்பு, (வினை) குறியிடந்தலைப்பாடு ஏற்பாடு செய், குறியிடந் தலைப்பாட்டிற்குரிய கால இடங் குறிப்பிடு, குறியிடஞ் சந்திக்க உறுதி கொடு.
Try-works
n. திமிங்கிலக் கொழுப்புச் சுத்தி செய்வதற்கு உதவும் கருவிகல அமைவு.
Trzmontane
n. அப்பாலையர், ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கே வாழ்பவர், அன்னியர், நாகரிகமற்றவர், (பெயரடை) அப்பாலைய, ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கிலுள்ள.
Tsar
n. முன்னாள் வழக்கில் ருசியநாட்டுச் சக்கரவர்த்தி.
Tsarevich, tsarevitrch
n. முன்னாள் வழக்கில் ருசிய நாட்டுச் சக்கரவர்த்தி மகனின் மனைவி.
Tsarism
n. ருசிய சக்கரவர்த்தி மகள், ருசிய சர்க்கரவர்த்தி மகனின் மனைவி.
Tsarist
n. ருசிய சக்கரவர்த்தி ஆட்சி, ஆதரவாளர், வன்முறையாட்சி ஆதரவாட்சி.
Tsaritsa
n. ருசியநாட்டுச் சக்கரவர்த்தினி.
Tsesarevich, tsesarevitch
n. ருசிய சக்கரவர்த்தியின் மூத்தமகன், ருசிய சக்கரவர்த்தி பீட அரசுரிமைமயாளன்.
Tsetse
n. ஆப்பிதிக்கா கண்டத்துக் கொடு நச்சு உண்ணி வகை, கால் நடைகளைக் கடித்து உயிரைப் போக்கிவிடும் ஆப்பிரிக்க ஈ வகை.
Tsotsi
n. தென்னாப்பிரிக்க பழங்குடிக் குழந்தை.
Tuan
n. திருவாளர், தலைவர்.
Tub
n. கொப்பறைத் தொட்டி, தொட்டி அளவு, சிறுமிடா, மிடாநிடிலை அளவு, மிடாவடிவப் பொருள், திருக்கோயில் உரை மேடை, பஞ்சுறை தேய்ப்புக் குளியலுக்குரிய வட்டக் கல் தொட்டி, பஞ்சுடிறை தேய்ப்புக்குளியலுக்குரிய தட்டையான குடுவைத் தொட்டி, சுரங்கக் குழிபதி தொட்டி, சுரங்கத் தாதுப் பொருள்களைக் கொண்டுசெல்லும் கூடைப்பெட்டி, பயிற்சிப்படகு, (வினை) வட்டக்கல்தொட்டியில் குளிப்பாட்டு, பஞ்சுறை தேய்த்துக் குளி, அலம்பு, அலம்புறு, தொட்டியில் செடி நட, தோணியில் படகுப் பயிற்சி பெறு, சுரங்கக் குழிக்கு உள்வரிச்சட்டக் காப்பீடு.
Tuba
n. எக்காளவகை, பித்தளைத் துளையிசைக் கருவி வகை.
Tuba uterina
n. கருக்குழாய்.
Tubage
n. குழாய்வடிவப் பொருள், குக்ஷ்ய்ச் செருகீடு, துப்பாக்கி உட்குழாய்ச் செருகிடு, வலிமைப்படுத்துவதற்காகத் துப்பாக்கிக் குழாயினுள் இன்னொரு குழாயினைச் செருகி வைத்தல், (மரு) உட்குழாய்ச் செருகீட்டு முறை.