English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tart
-2 a. காரமான., கடும்புளிப்பான, கடுப்பான, வெடுக்கென்ற, துடுக்கான, வொட்டொன்று துண்டு இரண்டான.
Tartan
-1 n. பல்வண்ணக் கட்டக்கோடிட்ட ஸ்காத்லாந்து மேட்டுநில மக்கள் கம்பளி ஆடைவகை, கட்டமிக்க துணி, வகை, ஸ்காத்ரலாந்து மேட்டுநிலத்தார்.
Tartan
-2 n. நிலநடுக்கடலில் வழங்கும் ஒற்றைப் பாய்மர கப்பல்வகை.
Tartar
n. தார்த்தாரி பகுதியினர், தார்த்தாரி இனத்தவர்,. துருக்கிய-கோசக்கிகயர் உள்ளிட்டட மக்கட் குழுவினர்.
Tartar
-3 n. மிடாவிளிம்புப் பொருக்கு, பல் ஊத்தை, விளக்க மருந்துவகை.
Tartarean
a. கிரேக்க புராண வழக்கில் கீழுலகக் கிடங்கு சார்ந்த.
Tartarian,
தார்த்தாரி இனஞ் சார்ந்த.
Tartaric
a. புளிடியகஞ் சார்ந்த, புளியகத்திலிருந்து பட்ட.
Tartarization.
n. புளியகக் கலப்பு, புளியகஞ் சேர்ப்பு புளியகப் பண்பூட்டல்.
Tartarize
v. புளியகத்துடன் கல, புளியகஞ்சேர், புளியப் பண்பூட்டு.
Tartarly
a. தார்த்தாரிய இனத்தவர் போன்ற, முரடுயரான, கொடுந் தோற்றமுடைய.
Tartarus
n. கிரேக்க புராணத்தில் கீழுலகக் காவற்கிடங்க கீழுலகத் தண்டனையிடம்,
Tartlet
n. பொதியப்பத்துண்டு.
Tartly
adv. வெடுக்கென்று, கடுப்புடன்.
Tartness
n. கடுகடுப்பு, வெடுவெடுப்பு, காரச்சுவையுடைமை, கடும் புளிப்புச் சுவை.
Tartrate
n. புளியகக் காடியின் உப்புச் சத்து.
Tartufe, Tartuffe
ஆஷாடபூதி.
Tartuffeism
n. பாசாங்குச் சமயப்பற்று., போலிச்சமய வேடம்.
Tar-water
n. மருத்துக் குளிர்நீர், மருந்தாகப் பயன்படும் காரெண்ணெய் வளிநீர்.
Task
n. இடுபணி, வேலைச்சுமை, கடமைப் பொறுபபு உழைப்பு, கட்டளைப்பாடம், பள்ளிப் படிப்பிற்கு வகுத்துஅமைக்கப்பட்ட திட்டப் பாடப்பகுதி, (வினை)பணி சுமத்து வேலையாக்கு, பணிக்கடம் ஒழுங்கமைத்துக் கொடு, உழைப்பு வாங்கு,