English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Upgrade
n. மேல்நோக்கிய சாய்வு, மேற்போக்கு, (பெ.) மேல்நோக்கிய, மேல்நோக்கிச் சாய்வான, (வினை.) பதவி உயர்த்து, திறம் உயர்த்து, சரக்கு நயம் உயர்த்து, தாழ் சரக்கிளை உயர்தரத்தேற்று.
Upgrowth
n. வளர்ச்சி, வளர்ச்சிமுறை, மேனோக்கி வளர்ந்த கட்டமைவு.
Uphand
a. கையிலெடுத்து உயர்த்தப்பட்ட.
Upheaval
n. உயர்த்துதல், பொங்குதல், (மண்.) நிலத்தள உயர்வெழுச்சி, பொங்கெழுச்சி.
Upheave
v. பொங்கியெழு, புடைத்தெழு, எழுச்சியுறு.
Upheld
v. 'அப்ஹோல்ட்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
Uphill
-1 n. செங்குத்து மலைச்சரிவு.
Uphill
-2 adv. மலையில் மேல்நோக்கி, கடுமுயற்சியுடன்.
Uphill
-2 a. மேல்நோக்கிச் சாய்ந்துள்ள, செங்குத்தச் சாய்வான, எளிதிற் செய்ய இயலாத, கடுமையான, கடினமான.
Uphoard
v. குவித்து வை, குவித்துத் திரட்டு.
Uphold
v. நேராக வை, நேராக நிறுத்து, தாங்கு, பற்றி நில், ஆதரவளி, செயலில் முனைந்து நில், விடாப்பிடியாக நில,விடாப்பிடியாகப் பின்பற்று, உறுதியாகக் கடைப்பிடி.
Upholder
n. தாங்குவோர், ஆதரவாளர், காப்புறுதியாளர், விடாப்பிடியாகப் பற்றி நிற்பவர், கடைப்பிடி உறுதியாளர்.
Upholster
v. தட்டுமுட்டுக்கல வாய்ப்பணி ஒப்பனை செய், இருக்கை சாய்விருக்கைகளுக்குத் திண்டுறை கைத்திணைவி, மெத்தை-சுருள் வில் முதலியன இணைவி, மெத்தையமைவி, பொதியுறையமைவி.
Upholsterer
n. வண்டி மெத்தை-திண்டு வேலைக்காரர்.
Upholsterer-bee
n. இறால் தும்பி, தேன்கூட்டுக் கண்ணறை ஒப்பனைத் தேனீ.
Upholstery
n. வண்டி மெத்தை-திண்டு வேலை.
Uphroe
n. (கப்.) தளைபுழைக்கட்டை, மேற்கட்டி ஒழுங்கு செய்ய உதவும் கயிறுபுகு நீள்மரக்கட்டைப் பாளம்.
Uphurl
v. மேற்சுழற்றி எறி.